ADDED : பிப் 18, 2024 07:51 PM

புதுடில்லி: பா.ஜ.,தேசிய தலைவர் ஜெ.பி.,நட்டாவின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
டில்லியில் பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் பிரதமர் மோடி ,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பா.ஜ., தேசிய தலைவர் ஜெ.பி.,நட்டாவின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் பா.ஜ., தேசிய தலைவராக அமித்ஷாவிடம் இருந்து பெற்றார். 2023-ம் ஆண்டு ஜனவரியில் முடிவடைந்தது.
இருப்பினும் நட்டா பா.ஜ., தலைவராக இருந்த கால கட்டத்தில் உ.பி., குஜராத், உத்தரகண்ட், ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் வரும் மே மாதத்திற்குள்ளாக பொது தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பா.ஜ., 370 இடங்கள் முதல் 400 இடங்களை வரையில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதனையடுத்து நட்டாவின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் வரையில் நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.