அ.தி.மு.க., பொதுக்குழு வழக்கு விசாரிக்க நீதிபதி மறுப்பு
அ.தி.மு.க., பொதுக்குழு வழக்கு விசாரிக்க நீதிபதி மறுப்பு
ADDED : நவ 07, 2024 11:46 PM
சென்னை:அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்த சிவில் வழக்கை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மறுத்து விட்டார்.
அ.தி.மு.க., பொதுக்குழுவில், பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்த பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை நீக்கியும், பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர், சிவில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள், நீதிபதி ஜெயச்சந்திரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, ''2022ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்துக்கு எதிரான வழக்குகளை விசாரித்து உத்தரவு பிறப்பித்ததால், இந்த வழக்குகளை தான் விசாரிப்பது ஏற்புடையது அல்ல,'' என, நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
இந்த வழக்குகளை வேறு நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட, தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார்.