ADDED : அக் 07, 2025 07:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : டிஎஸ்பியை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி செம்மல், அரியலூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்டோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சங்கர்கணேஷை நேற்று கைது செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், டிஎஸ்பியை கைது செய்ய வேண்டும் என்ற முதன்மை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார்.
இந்நிலையில், நீதிபதி செம்மல் அரியலூர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை ஐகோர்ட் பதிவாளர் அல்லி பிறப்பித்துள்ளார்.