ADDED : ஆக 26, 2025 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; கடந்த 2022, ஜூலை 11ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரியும், திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யமூர்த்தி, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி, பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை நான்காவது உதவி சிட்டி சிவில் நீதிமன்றம், கடந்த மாதம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பழனிசாமி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, உத்தரவை தள்ளிவைத்தார்.