sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

/

நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

41


UPDATED : ஜன 09, 2024 02:53 PM

ADDED : ஜன 09, 2024 10:52 AM

Google News

UPDATED : ஜன 09, 2024 02:53 PM ADDED : ஜன 09, 2024 10:52 AM

41


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பில்கிஸ் பானு வழக்கில், 11 பேரை முன்னதாக விடுதலை செய்ததை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. குஜராத் மாநில பா.ஜ.., அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் லாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.

தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி கொடுங்குற்றவாளிகளை விடுவிக்க பிரயத்தனம் செய்யும் பா.ஜ.., ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீண்டகால சிறைவாசிகளை - நன்னடத்தையின் அடிப்படையிலும் வயது மூப்பு கருதியும் சட்டபூர்வமாக முன்விடுதலை செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது அவர்களது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது.

“நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்; என் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டேன்; ஒரு பெரிய மலையையே என் மேல் இருந்து அகற்றியது போன்ற உணர்வை பெறுகிறேன். இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்” என்று பில்கிஸ் பானு கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின்றன.

நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கத்தையும் போராடும் மன உறுதியையும் தருவதாகும். அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவருக்கும் அவருக்கு துணையாக நின்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் என் பாராட்டுகள். இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர் பாதுகாப்பில் அரசு உறுதி

சிறுபான்மையினர் நலன் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதச்சார்பு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் தற்போது 5 ஆண்டு காலத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும். அரசின் நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணியாளர் நிர்ணயம், பணி நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தல், பணியிட மாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் குறித்த கோரிக்கைகளுக்கென தனியாக இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.
கிராமப்புறங்களில் உள்ள அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்து வரும் நிதிநிலை அறிக்கையில் சாதகமாக பரிசீலிக்கப்படும். அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளை புதுமைப்பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்து நிதிநிலை அறிக்கையில் நல்ல செய்தி வெளிவரும்.
கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கு அரசு நிதி உதவி வழங்குவதற்கு திருத்தி அமைக்கப்பட்ட வழிமுறைகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும். சிறுபான்மையின கல்வி நிறுவனங்களில் காலை சிற்றுண்டி, புதுமைப்பெண் திட்டம் அமல்படுத்துவது குறித்து நல்ல அறிவிப்பு வரும். சிறுபான்மையினர் பாதுகாப்பில் அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.








      Dinamalar
      Follow us