தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நீதி வழங்குவதில் தாமதம் கூடாது; துல்லியமாகவும் இருக்கணும்: ஐகோர்ட் தலைமை நீதிபதி தர்மாதிகாரி வலியுறுத்தல்

நீதி வழங்குவதில் தாமதம் கூடாது; துல்லியமாகவும் இருக்கணும்: ஐகோர்ட் தலைமை நீதிபதி தர்மாதிகாரி வலியுறுத்தல்

நீதி வழங்குவதில் தாமதம் கூடாது; துல்லியமாகவும் இருக்கணும்: ஐகோர்ட் தலைமை நீதிபதி தர்மாதிகாரி வலியுறுத்தல்

1


ADDED : ஆக 16, 2026 09:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 09:27 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடலுார்: 'நீதி வழங்கும் பணிகளில் உள்ள தாமதங்களை குறைத்து, நீதிபதிகள் துல்லியமாக நீதி வழங்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி பேசினார்.

கடலுார் மாவட்டம், வடலுார் ஆபத்தாரணபுரம் பகுதியில், 15.62 கோடி ரூபாய் மதிப்பில், குறிஞ்சிப்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்கள், நீதிமன்ற அதிகாரிகள் குடியிருப்புகள் மற்றும் கடலுார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புனரமைக்கப்பட்ட பழைய கோர்ட் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடந்தது.

விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி பேசியதாவது:

கடலுார் மாவட்டத்தில், 1866ல் கட்டப்பட்ட பழைய நீதிமன்ற கட்டடம், காலங்களை கடந்து அடையாளமாக திகழ்கிறது. தற்போது அது புனரமைக்கப்பட்டதற்கு, அரசுக்கு நன்றி. இந்த கட்டட அதிசயம் மீட்டெடுக்கப்பட்டதால், வரலாறு குறித்த நினைவுகளும் மீட்டெடுக்கப்படுகிறது.

நீதிமன்ற வளாகங்களில் நுழையும் பொதுமக்கள், தங்களுக்கான நீதியை மட்டும் பெற்றுச் செல்லாமல் நம்பிக்கையையும் பெற்றுச் செல்கின்றனர். இந்த புதிய கட்டடங்களில், பொதுமக்களுக்கான நீதி நிலை நாட்டப்பட வேண்டும். நீதிபதிகள், கோர்ட்டுகளின் இயக்க சக்தியாக திகழ வேண்டும்.

பொதுமக்கள், நீதிபதிகள் மேல் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்துள்ளனர். நீதிபதிகள், இந்த புதிய சூழலில் புத்துணர்ச்சியுடன் மக்களுக்காக உழைக்க வேண்டும். நீதி வழங்கும் பணிகளில் உள்ள தாமதங்களை குறைத்து, துல்லியமாக நீதி வழங்க வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us