ADDED : நவ 14, 2025 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
* தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா - மதுரைக்கு திங்கள் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் டிச., 1 முதல் ஜன., 19 தேதி வரையிலும், மதுரை - காச்சிகுடாவுக்கு புதன் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், டிச., 3 முதல் ஜன., 21ம் தேதி வரையிலும் நீட்டித்து இயக்கப்பட உள்ளன
* ஐதராபாத் - கன்னியாகுமரிக்கு புதன் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், டிச., 3 முதல் ஜன., 21 வரையிலும், கன்னியாகுமரி - ஐதராபாத்துக்கு வெள்ளிக் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், டிச., 5 முதல் ஜனவரி 23 வரையிலும் நீட்டித்து இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களில், முன்பதிவு துவங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

