கள்ளச்சாராய பலி: சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு
கள்ளச்சாராய பலி: சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு
UPDATED : ஜூன் 20, 2024 04:13 PM
ADDED : ஜூன் 20, 2024 10:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுறை முறையிட்டார்.
அவர், பலி தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைகோரி முறையீடு செய்ய உள்ளதாகவும், அதனை அவசர வழக்காக விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறினார்.
அரசு தரப்பில், மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டு உள்ளார். எஸ்.பி., சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது என விளக்கம் அளித்தது.
இதனையடுத்து இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.