ADDED : டிச 24, 2025 07:34 AM

சென்னை: கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு, இரண்டு நாள் பயணமாக, முதல்வர் ஸ்டாலின் செல்கிறார்.
கள்ளக்குறிச்சியில், 35.1 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில், 139 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. இதை, வரும் 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், திருக்கோவிலுார் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே, 27 மற்றும் 28ம் தேதிகளில், வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடக்க உள்ளது.
இதில், மாநிலம் முழுதும் இருந்து விவசாயிகள், விவசாய இயந்திரங்கள், மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் உணவு பொருட்கள் விற்பனையாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கண்காட்சியை, 27ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இரு மாவட்டங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளிலும், முதல்வர் பங்கேற்கிறார்.

