ADDED : ஜூன் 02, 2025 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை தெற்கு தொகுதியில், 'நலம்' இலவச மருத்துவ முகாமை, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி துவங்கி வைத்தார். முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக வீடு, வீடாக நோட்டீஸ் வழங்கினார்.
அதன் பின் நிருபர்களுக்கு, வானதி அளித்த பேட்டி:
மதுரையில், ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இது முருக பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் மாநாடாக இருக்கும்.
நடிகர் கமல், மக்கள் ஆதரவை பெற்று வெற்றி பெற முடியாமல், தி.மு.க., பின்னால் ஒளிந்து, ராஜ்யசபா எம்.பி., பதவியை பெற்றுள்ளார்.
மதுரையில் முதல்வர் பார்வையிட சென்றபோது, அங்கு துணிகளை போட்டு மூடி வைத்திருந்த சம்பவம் தவறானது. கோவையிலும் பல இடங்களில், குப்பைகளை இதுபோன்றே மறைத்து வைத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

