sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போராட்டம் நடத்திய சாம்சங் தொழிலாளர்கள் கைது!

/

போராட்டம் நடத்திய சாம்சங் தொழிலாளர்கள் கைது!

போராட்டம் நடத்திய சாம்சங் தொழிலாளர்கள் கைது!

போராட்டம் நடத்திய சாம்சங் தொழிலாளர்கள் கைது!

22


UPDATED : அக் 09, 2024 04:28 PM

ADDED : அக் 09, 2024 12:51 PM

Google News

UPDATED : அக் 09, 2024 04:28 PM ADDED : அக் 09, 2024 12:51 PM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: சாம்சங் தொழிற்சாலை விவகாரத்தில் போராடி வரும் தொழிலாளர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 2 பேர் மயக்கம் அடைந்தனர்.



காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ளது சாம்சங் தொழிற்சாலை. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். முறையான ஊதிய உயர்வு, 8 மணிநேரம் வேலை, தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., சங்கத்தினர் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டம் தொடர்ந்த நிலையில், அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே பேச்சு நடத்தி தீர்வு காணும்படி அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி தொழில் துறை அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் முன்னிலையில் பேச்சு நடத்தப்பட்டது.இதில் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் ராஜா வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் அதை பொருட்படுத்தாத சி.ஐ.டி.யு., சங்கத்தினர், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்த அரசு நிர்வாகம், நேற்று இரவோடு இரவாக போராட்ட இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலை போலீசார் மூலம் அகற்றியது. தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று முக்கிய நிர்வாகிகளையும் கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று போராட்ட களத்துக்கு வந்த தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். அங்கு வந்த போலீசார், 'இப்படி கூடுவது சட்டவிரோதம், கலைந்து செல்லுங்கள்' என்று கூறினர். அதை ஏற்காமல் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்ததால் போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர்.

அப்போது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு, வாக்குவாதமும் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் தொழிலாளர்கள் மணிமாறன், தயாநிதி என்ற இருவர் போராட்ட களத்திலேயே மயங்கினர். சக தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். போராட்ட களத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தடையில்லை

இந்நிலையில், சாம்சங் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தாக கூறி சி.ஐ.டி.யு., சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொண்ரவு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் பாலாஜி மற்றும் அருள்முருகன் அமர்வு விசாரித்தது. அப்போது, தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை சிறையில் அடைக்கவில்லை என போலீசார் விளக்கமளித்தனர். இதனையடுத்து சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என நீதிபதிகள் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.



தலைவர்கள் சந்திப்பு

கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு, இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.



15 நாள் காவல்

இதனிடையே, போராட்டத்தின் போது போலீசாரை தாக்கியதாக எல்லன் மற்றும் சூரிய பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.








      Dinamalar
      Follow us