ADDED : பிப் 19, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடகாவில் பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய, அம்மாநில முதல்வர்சித்தராமையா, 'காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், அணை கட்ட முடிவு செய்துள்ளோம்' என்று அறிவித்துள்ளார். இது சட்டப்படி தவறு.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக காவிரி நீரே உள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் உடனான நெருக்கத்தை, தமிழகத்தின் நலன்களுக்காக பயன்படுத்தி,மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசின் முயற்சியை முதல்வர் ஸ்டாலின் முறியடிக்க வேண்டும்.
- வானதி சீனிவாசன்,பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர்

