ADDED : செப் 06, 2024 07:11 AM

திருப்பூர் :ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அளித்த பேட்டி: தமிழகம் முழுதும் விநாயகர் சதுர்த்திக்கு, ஹிந்து முன்னணி சார்பில், 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகள் முன், ஒன்றரை அடி, இரண்டடி என, 15 லட்சம் சிலைகளை வைத்து கொண்டாட உள்ளனர்.
திருப்பூரில், நான்காம் நாளும், கோவையில், ஐந்தாம் நாளும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுகிறோம். இதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு கடிதம் கொடுத்துள்ளோம்.
திருப்பூர் மாவட்டத்தில், 1,500 இடங்களில், ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடுகிறோம். அந் நிகழ்வில் மத்திய அமைச்சர் முருகன் பங்கேற்கிறார்.
ஆங்காங்கே சில இடங்களில் போலீசார் மூலம் சிலை வைக்க நெருக்கடி தரப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, இரண்டு நாள் மதுக்கடைகளுக்கு விடுமுறை விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.