கட்டபொம்மன் வாரிசு நிலத்தை அபகரித்த ஆளுங்கட்சி புள்ளி!
கட்டபொம்மன் வாரிசு நிலத்தை அபகரித்த ஆளுங்கட்சி புள்ளி!
ADDED : நவ 05, 2024 09:29 AM

ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''படுகர் சமுதாயத்தை புறக்கணிக்கிறதா புலம்புறாங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய். ''அவங்க, நீலகிரி மாவட்டத்துல தானே அதிகமா இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''ஆமா... குன்னுார்தி.மு.க., - எம்.எல்.ஏ.,வான ராமச்சந்திரன் வசமிருந்த சுற்றுலா துறைஅமைச்சர் பதவியை சமீபத்துல பறிச்சுட்டு, 'டம்மி'யான அரசு கொறடா பதவியைதந்திருக்காங்களே... படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரது பதவியைபறிச்சதுல, அந்த சமுதாயத்தினர், ஆளுங்கட்சி மேல அதிருப்தியில இருக்காங்க பா...
''இந்த சூழல்ல, ராமச்சந்திரனின் எதிர்கோஷ்டியான மாவட்டச் செயலர்முபாரக், தனக்கு வேண்டிய பலருக்கும்கட்சி பதவிகளை வழங்கிட்டு இருக்காரு...ஆனா, படுகர் சமுதாயத்தினருக்கு பதவி தராம புறக்கணிக்கிறாராம்... கட்சியில பல வருஷமா இருக்கிற படுகர்கள் பலரும், தலைமைக்கு புகார் அனுப்பிட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''ரியல் எஸ்டேட் தொழில்ல கொழிக்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம்,உடுமலை தாலுகா, குடிமங்கலம், பெதப்பம்பட்டி பகுதியில விளை நிலங்களை, வீட்டு மனைகளா மாற்றி விற்பனை பண்றா... விளைநிலங்களை மனைகளா மாத்தணும்னா, குறிப்பிட்ட மாதங்கள் அதுல சாகுபடி நடக்காமஇருக்கணும் ஓய்... ''இதுக்காக, வருவாய்துறையின் கிராம அடங்கல்பதிவேட்டுல, 'நிலம் தரிசாதான் இருந்துது'ன்னு சான்று வழங்கணும்... ஆனா, விதிகள் எதையும்பார்க்காம, வருவாய் துறையினர் சான்றிதழ்களை வாரி வழங்கறா ஓய்...
''இதனால, பொள்ளாச்சி- தாராபுரம் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி, ஏகப்பட்ட, 'லே - அவுட்'கள்முளைச்சுட்டு வரது... இதுல, சாலையோரம் இருக்கற மழைநீர் வடிகால்களையும் ஆக்கிரமிச்சு, 'லே - அவுட்' போட்டுடறா ஓய்...''பெரும்பாலும், இந்ததொழில்ல ஆளுங்கட்சியினர் தான் ஈடுபடறா... இவாள்லாம், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜியுடன் இருக்கறபடங்களை, சமூக வலைதளங்கள்ல அடிக்கடி பரவ விடறதால, இவா முறைகேடுகளை அதிகாரிகள் கண்டுக்க மாட்டேங்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''இதே மாதிரி விவகாரம் என்கிட்டயும்ஒண்ணு இருக்குல்லா...''என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்காக,துாத்துக்குடி மாவட்டம்,ஓட்டப்பிடாரம் தாலுகா,பி.துரைசாமிபுரம் கிராமத்தில், பல ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி குடுத்திருக்கு... இதுல, 1 ஏக்கர் 33 சென்ட் நிலத்தை, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துல முக்கிய பதவியில இருக்கிற, ஆளுங்கட்சிஒன்றிய புள்ளி மோசடியா அபகரிச்சு, 2016ம் வருஷமேவித்துட்டாரு வே...
''நிலத்தை வாங்கியவர்,சமீபத்துல பட்டா மாறுதல் கேட்டு, தாலுகாஆபீசுக்கு போனப்பதான்,ஆளுங்கட்சி புள்ளியின் மோசடி அம்பலத்துக்கு வந்திருக்கு... நிலத்தை வாங்கியவர், எஸ்.பி., ஆபீஸ்ல புகார் குடுத்துஇருக்காரு பா... ''ஆனா, ஆளுங்கட்சிமுக்கிய புள்ளிக்கு உள்ளூர்அமைச்சரின் ஆதரவு இருக்காம்... அதனால, 'என்னை ஒண்ணும் பண்ண முடியாது'ன்னு முக்கிய புள்ளி சவால் விட்டுட்டு இருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி. பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.