கவரைப்பேட்டை ரயில் விபத்தில் மத்திய அரசு சதி: தி.மு.க., புகார்
கவரைப்பேட்டை ரயில் விபத்தில் மத்திய அரசு சதி: தி.மு.க., புகார்
UPDATED : அக் 16, 2024 01:49 AM
ADDED : அக் 15, 2024 09:28 PM
சென்னை:'மெரினாவில் ஐந்து பேர் பலியான சம்பவத்தை மறைக்க, ரயில் விபத்தில், தி.மு.க., நாடகமாடுகிறது' என்ற மத்தியஅமைச்சர் முருகனின்குற்றச்சாட்டுக்கு பதிலடியாக, “ரயில்வே துறையை தனியாரிடம் தாரை வார்க்க முடிவு செய்துள்ளதால்,கவரைப்பேட்டை ரயில் விபத்தில், மத்திய அரசு சதி செய்துள்ளது,” என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி:
கவரைப்பேட்டை ரயில் விபத்தில், தி.மு.க., சதி செய்கிறது என, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என, நாட்டின் முக்கிய பொறுப்பில் இருக்கும் முருகன்பேசக்கூடாது.
மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில், 15 லட்சம் பேர்பங்கேற்றனர். அதில்,ஐந்து பேர் சூரியனின் வெப்பத்தின் தாக்கத்தால், நீர்ச்சத்து குறைந்து இறந்துள்ளனர்.
கடந்த 2016 சட்டசபைதேர்தல் பிரசாரத்தின்போது, சுட்டெரிக்கும் வெயிலில் ஜெயலலிதா நடத்தியகூட்டத்தில், ஆறு பேர்நெரிசலில் சிக்கி இறந்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில், 'இண்டி' கூட்டணி வெற்றி பெற்றது. ஹரியானாவில் பா.ஜ., பெற்ற வெற்றிவிவாதப் பொருளானது. அதை மறைக்க, ரயில் விபத்து சதியை மத்திய அரசுசெய்திருக்கிறது.
ரயில்வே துறையை தனியாரிடம் தாரை வார்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், ரயில் விபத்துக்கான சதியை அரங்கேற்றியிருக்கலாம் என்ற சந்தேகம், தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.