கீழடி 11ம் கட்ட அகழாய்வு ஆவணப்படுத்தும் பணி தொடக்கம்!
கீழடி 11ம் கட்ட அகழாய்வு ஆவணப்படுத்தும் பணி தொடக்கம்!
ADDED : ஆக 23, 2026 05:47 PM

கீழடி: கீழடி 11ம் கட்ட அகழாய்வில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.
கீழடியில் கஜேந்திரன் என்பவரது 1.5 ஏக்கர் நிலத்தில் மார்ச் 15ம் தேதி முதல் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 13 குழிகள் தோண்டப்பட்டு கைப்பிடியுடன் கூடிய சுடுமண் பானை, கிண்ணங்கள், ஒரே குழியில் மூன்று வித வடிகால் அமைப்புகள், நீர்வழி தடங்கள், செங்கல் கட்டுமானங்கள், தங்க பொருட்கள், தக்கழி, பாசிகள், பானை ஓடுகள், உறை கிணறு உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.
இவற்றை ஆவணப்படுத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளது. ஒவ்வொரு குழிகளிலும் கிடைத்த பொருட்கள், ஆழம், பொருட்களின் எடை, அளவு, எண்ணிக்கை உள்ளிட்டவற்றை ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குழிகளை போட்டோ மற்றும் வீடியோ பதிவும் செய்துள்ளனர்.
முதற்கட்டமாக 9 குழிகளில் கிடைத்த பொருட்கள் ஆவணப்படுத்தப்படும் என்றும், அதன் பின் மேற்கொண்டு தோண்டப்பட்ட 4 குழிகளில் அகழாய்வு பணிகள் தொடர்ச்சியாக நடக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
