sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

என்னை செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார்: இயக்குனர் மீது நடிகை குற்றச்சாட்டு

/

என்னை செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார்: இயக்குனர் மீது நடிகை குற்றச்சாட்டு

என்னை செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார்: இயக்குனர் மீது நடிகை குற்றச்சாட்டு

என்னை செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார்: இயக்குனர் மீது நடிகை குற்றச்சாட்டு

27


UPDATED : செப் 06, 2024 12:36 PM

ADDED : செப் 06, 2024 05:07 AM

Google News

UPDATED : செப் 06, 2024 12:36 PM ADDED : செப் 06, 2024 05:07 AM

27


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தமிழ் திரைப்பட இயக்குனர், என்னை செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார்' என, நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகில், நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கத்தால், பல நடிகையர் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். சில நடிகர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'நீலகுறுக்கன், அத்வைதம்' போன்ற மலையாள படங்களில் நடித்த ஒரு நடிகை தமிழில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்த பின் சினிமாவை விட்டே விலகி விட்டார்.

இந்நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் அவர் அளித்துள்ள பேட்டி: எனக்கு அப்போது, 18 வயது. தமிழ் இயக்குனர் ஒருவர், அவரது மனைவியுடன் வந்து, என் அப்பாவிடம் பேசி சினிமாவில் நடிக்க வைப்பதாக அழைத்து சென்றார். படத்தில் நடிக்கும் போது, அந்த இயக்குனரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தேன்.

ஒரு நாள் இயக்குனரின் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில், என்னை மகள் போன்று நினைப்பதாக கூறி முத்தமிட்டார். அப்போதே, எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. என்னுடன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

பின், அவரால் நான் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். ஓராண்டு காலம் அந்த இயக்குனரின் செக்ஸ் அடிமையாக இருந்தேன். பயத்தால் இதை அப்போது என்னால் கூற முடியவில்லை. இந்த அவமான உணர்வில் இருந்து வெளியே வர எனக்கு, 30 ஆண்டுகள் ஆனது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆனால், அந்த இயக்குனர் யார் என்ற விபரத்தை அவர் தெரிவிக்கவில்லை. போலீசாரின் விசாரணையில், அவர் பற்றிய விபரத்தை தெரிவித்துள்ளதாக, அவர் கூறியுள்ளார். அவரது பேட்டி மலையாள மற்றும் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'வெளியே சொல்ல வேண்டாம்'


மலையாள சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை உள்ளது என, இங்குள்ள நடிகையரும் பேச தொடங்கி உள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக, 2019ல் விசாகா கமிட்டி பரிந்துரைப்படி, நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி உருவாக்கப்பட்டது.
இந்த கமிட்டியின் ஆலோசனை கூட்டம் சென்னை தி.நகரில் நேற்று முன்தினம் நடந்தது. நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி, உறுப்பினர்கள் சுஹாசினி, குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கமிட்டியில் ஒரு வழக்கறிஞரை நியமிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.

தீர்மானங்கள்


1. உரிய ஆதாரங்களுடன் பாலியல் குற்றச்சாட்டு வந்து, உண்மை இருக்கும் பட்டசத்தில், சம்பந்தப்பட்டவர்கள் திரைத்துறையில் ஐந்து ஆண்டுகள் பணியாற்ற தடை விதிக்கும்படி, தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரை செய்யப்படும்
2. பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும்நபர்கள் மீது, முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
3. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க, ஏற்கனவே தனி தொலைபேசி எண் உள்ள நிலையில், தற்போது இ -மெயில் வாயிலாகவும் புகார் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது
4. பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி வாயிலாக தங்கள் புகார்களை அளிக்கலாம். நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம்
5. யு -டியூபில் திரை துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதுாறாக பதிவிடப்படுவதால், பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தால், கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்புஅளிக்கும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.








      Dinamalar
      Follow us