ADDED : அக் 30, 2026 07:32 PM
தேசிய அளவில், ஒரு கிலோ அரிசியின் சராசரி விலை 48.12 ரூபாயாக இருக்கும்போது, சென்னையில் 80 ரூபாய்க்கும் அதிகமாகவும், உருளைக்கிழங்கு தேசிய சராசரி விலையாக 22.69 ரூபாயாக இருக்கும்போது, சென்னையில் 58 ரூபாயாகவும் இருப்பதால், சாமான்ய மக்களின் சமையலறை முடங்கி போய் விட்டது. இதற்கு தீர்வு காண, முதல்வர் விஜய்க்கு, எவ்வித நிர்வாக அறிவோ, பொருளாதாரப் புரிதலோ இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
பண வீக்கம், சந்தை கட்டுப்பாடு, விநியோக சங்கிலி முறை போன்ற, அடிப்படை மக்கள் நலக் கொள்கைகளில், குறைந்தபட்ச நிலைப்பாட்டை கூட எடுக்க முடியாத, அவரது அரசியல் மற்றும் நிர்வாகத் திறனின்மை, வெட்ட வெளிச்சமாகி உள்ளது. தனது பிம்பத்தை கட்டமைப்பதில் மட்டுமே, குறியாக இருக்கிறார். இனியாவது, மக்களின் துயரத்தை உணர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, த.வெ.க., அரசு மேற்கொள்ள வேண்டும்.
நயினார் நாகேந்திரன்,
தமிழக தலைவர், பா.ஜ.,
