sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அணுஉலை போராட்டக் குழுவினர் முதல்வர் ஜெ.,யுடன் இன்று சந்திப்பு

/

அணுஉலை போராட்டக் குழுவினர் முதல்வர் ஜெ.,யுடன் இன்று சந்திப்பு

அணுஉலை போராட்டக் குழுவினர் முதல்வர் ஜெ.,யுடன் இன்று சந்திப்பு

அணுஉலை போராட்டக் குழுவினர் முதல்வர் ஜெ.,யுடன் இன்று சந்திப்பு


ADDED : செப் 20, 2011 11:02 PM

Google News

ADDED : செப் 20, 2011 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: மத்திய அமைச்சர் நாராயணசாமி சந்திப்பிற்கு பின் அணுஉலை போராட்டக் குழுவினர், முதல்வரையும் இன்று சந்தித்து பேச உள்ளனர்.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் உச்சக்கட்டத்தில் உள்ளது. கூடங்குளத்தை அடுத்துள்ள இடிந்தரையில் செப்.,11ல் துவங்கிய உண்ணாவிரதம் நேற்று பத்தாவது நாளை எட்டியது. நேற்று மாலையில் நாராயணசாமி இடிந்தரைக்கு நேரில் சென்றார். கடந்த பத்து நாட்களாக நெல்லை கலெக்டரோ, தமிழக அமைச்சர்களோ, அரசு பிரதிநிதிகளோ செல்லாத நிலையில் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் விசிட் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர் இடிந்தகரையில் உண்ணாவிரத பந்தலுக்குள் நுழைந்தபோது ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பொதுமக்கள் 'மவுனவிரதம்' போல அமைதிகாத்தனர். அவருடன் யாரும் பேசவில்லை. போராட்டக்குழு உதயகுமார் கோரிக்கை மனுகொடுத்து அதனை விளக்கி பேசினார். மற்றபடி அமைச்சர் நாராயணசாமியை பேச அனுமதிக்கவில்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, போராட்டக் குழுவினருடன் பேச ஏற்கனவே நேரம் ஒதுக்கியிருந்தார். நேற்று மாலை வரையிலும் முதல்வரை சந்திப்பதில்லை என்ற முடிவில் இருந்தனர். இருப்பினும் நேற்று இரவு உதயக்குமார், புஷ்பராயன், பங்கு தந்தை ஜெயக்குமார், வக்கீல் சிவசுப்பிரமணியன், லிட்வின் உள்ளிட்டோர் சென்னை கிளம்பிச்சென்றனர். சென்னையில் ஏற்கனவே தங்கிஉள்ள தூத்துக்குடி பிஷப் யுவான் அம்புரோஸ், நாகர்கோவில் கோட்டார் பிஷப் பீட்டர் ரெமிஜியஸ் ஆகியோர் இன்று காலை 11மணிக்கு முதல்வரை சந்தித்து பேசுகிறார்கள்.






      Dinamalar
      Follow us