தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தனி யூனியன் பிரதேசம்; கூகி இனத்தவர் கோரிக்கை

தனி யூனியன் பிரதேசம்; கூகி இனத்தவர் கோரிக்கை

தனி யூனியன் பிரதேசம்; கூகி இனத்தவர் கோரிக்கை


ADDED : ஜூன் 01, 2025 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2025 05:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி : 'மணிப்பூரில் போராட்டங்கள் மற்றும் பிரச்னைகளை தவிர்க்க, தனி யூனியன் பிரதேசம் அமைக்க வேண்டும்' என, அங்குள்ள கூகி இனத்தவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கூகி - மெய்டி இனத்தவர் இடையே 2023ல் மோதல் வெடித்தது. இதையடுத்து, ஒரு ஆண்டு காலமாக நீடித்த வன்முறை சம்பவங்களுக்கு, 250க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.

தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் டில்லியில் மணிப்பூரில் உள்ள கூகி - சோ மகளிர் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் சோங் ஹோகிப் நேற்று கூறியதாவது:

மணிப்பூரில் பிரச்னைகள் சற்று ஓய்ந்திருந்தாலும், கூகி இனத்தவருக்கு பெரும் கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளன.

இதை தவிர்க்க, சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசம் கூகி மக்களுக்கென தனியாக அமைவது அவசியம். இது எந்த சமூகத்திற்கும் எதிரானது அல்ல; இது கூகி மக்களின் பாதுகாப்பு மற்றும் இருப்பு உரிமையை உறுதி செய்வதற்குத் தேவையான ஒரு நடவடிக்கையாகும்.

இந்தக் கோரிக்கையை அரசியல் கோணத்தில் பார்க்கக்கூடாது. மாறாக பாதுகாப்பு மற்றும் அமைதிக்குத் தேவையான ஒன்றாகப் பார்க்க வேண்டும்.

கூகி - சோ பழங்குடியினர் இம்பாலில் இருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். விலங்குகளைப் போல கொல்லப்பட்டுள்ளனர். நாங்கள் எதிரிகளைப் போல நடத்தப்பட்டோம். எங்கள் அடையாளம் காரணமாக நாங்கள் கொல்லப்பட்டோம். பாதுகாப்புப் படையினர் சரியான நேரத்தில் தலையிடவில்லை. அரசும் எங்களை காப்பாற்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us