UPDATED : செப் 30, 2011 03:53 PM
ADDED : செப் 30, 2011 03:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : தினமலர் நாளிதழ் சார்பில் நடக்கும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி இன்று கோவை கொடிசியா தொழில் வர்த்தக மையத்தில் கோலாகலமாக துவங்கியது.
இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் கிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தினமலர் இணை ஆசிரியர் கி.ராமசுப்பு பங்கேற்றார். தொடர்ந்து அனைத்து அரங்குகளையும் சுற்றிப்பார்த்தனர். கண்காட்சியில் வண்ணமீன் கூட்டம் , பறவை பட்டாளம், வகை, வகையான நாய்கள் அணிவகுப்பு, திகில் நிறைந்த பேய்மாளிகை என குழந்தைகளுக்கு பொழுது போக்கு அம்சமாக நிறைய சங்கதிகள் அடங்கியிருக்கிறது.