ADDED : செப் 21, 2011 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :மத்திய அமைச்சர் நாராயணசாமி சந்திப்பிற்கு பிறகு அணுஉலை போராட்டக்குழுவினர் முதல்வரை இன்று சந்தித்து பேச உள்ளனர்.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் உச்சக்கட்டத்தில் உள்ளது. கூடங்குளத்தை அடுத்துள்ள இடிந்தரையில் செப்.,11ல் துவங்கிய உண்ணாவிரதம் இன்று 11வது நாளை எட்டிய நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, போராட்டக்குழுவினர் சந்தித்து பேச உள்ளனர். சென்னையில் ஏற்கனவே முகாமிட்டுள்ள தூத்துக்குடி பிஷப் யுவான் அம்புரோஸ், நாகர்கோவில் கோட்டார் பிஷப் பீட்டர் ரெமிஜியஸ், உதயக்குமார், புஷ்பராயன், பங்கு தந்தை ஜெயக்குமார், வக்கீல் சிவசுப்பிரமணியன், லிட்வின் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து பேசுகிறார்கள்.