பா.ஜ., நிர்வாகியை கொல்ல முயன்ற வழக்கில் வாலிபர் மீது குண்டாஸ்
பா.ஜ., நிர்வாகியை கொல்ல முயன்ற வழக்கில் வாலிபர் மீது குண்டாஸ்
UPDATED : அக் 26, 2026 09:29 PM
ADDED : அக் 26, 2026 06:16 PM
ஈரோடு: மொடக்குறிச்சியில் பா.ஜ., நிர்வாகியை கொல்ல முயன்ற வழக்கில், கூலிப்படையை சேர்ந்த வாலிபர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஈரோடு மாவட்டம், எழுமாத்துாரை அடுத்த மண்கரடு செல்வன் நகரை சேர்ந்தவர் பா.ஜ., நிர்வாகி பிரகாஷ், 44. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி சவிதா, 39. இவருக்கும் பா.ஜ.,வை சேர்ந்த ரெயின்போ கணபதிக்கும், 45, ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
இதை பிரகாஷ் கண்டித்ததால், இருவரும் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். செப்., 21ல் காரில் சென்ற பிரகாஷை, ரெயின்போ கணபதி உள்ளிட்ட சிலர் வழிமறித்து கொல்ல முயன்ற நிலையில் அவர் தப்பித்தார்.
அவர் புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார், ரெயின்போ கணபதி, சவிதா, டாடா சரவணன், 39, மோகன்ராஜ், பிரவீன், மதுரையை சேர்ந்த கரண், 29, ஆகியோரை கைது செய்தனர். ஈரோடு சூரம்பட்டி வலசில் கரண் தற்போது வகிக்கிறார். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, மொடக்குறிச்சி போலீசார் எஸ்.பி., மூலம் ஈரோடு கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். கலெக்டர் கந்தசாமி பரிசீலனையை ஏற்றதால், கரண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான நகலும் அவரிடம் வழங்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
