sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அன்று உதயநிதிக்கு குட்டு; இன்று அ.தி.மு.க.,வுக்கு ஷொட்டு; பவன் கல்யாண் திட்டம் என்ன?

/

அன்று உதயநிதிக்கு குட்டு; இன்று அ.தி.மு.க.,வுக்கு ஷொட்டு; பவன் கல்யாண் திட்டம் என்ன?

அன்று உதயநிதிக்கு குட்டு; இன்று அ.தி.மு.க.,வுக்கு ஷொட்டு; பவன் கல்யாண் திட்டம் என்ன?

அன்று உதயநிதிக்கு குட்டு; இன்று அ.தி.மு.க.,வுக்கு ஷொட்டு; பவன் கல்யாண் திட்டம் என்ன?

31


ADDED : அக் 17, 2024 04:26 PM

Google News

ADDED : அக் 17, 2024 04:26 PM

31


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அ.தி.மு.க., துவக்க விழா முன்னிட்டு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தி, தமிழக அரசியல் பிரமுகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

எதிர்ப்பு


ஆந்திராவின் துணை முதல்வராக இருப்பவர் பவன் கல்யாண். பிரபல நடிகர். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர். சினிமாவில் அதிரடியாக கலக்கிய பவன் கல்யாண், அரசியலிலும் கால் பதித்து நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் ஆந்திர துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார். ஆந்திராவில் சனாதனத்தை ஆதரித்தும், அதற்காக குரல் எழுப்பியும் வரும் பவன் கல்யாண், திருப்பதி லட்டு விவகாரத்தில் அதி வேகமாக செயல்பட்டு புயலை கிளப்பிய அவர், சனாதன எதிர்ப்பாளர்களை எதிர்க்க ஆரம்பித்துள்ளார்.

உதயநிதிக்கு எதிர்ப்பு

திருப்பதியில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் பேசுகையில், 'நிறைய தமிழ் மக்கள் உள்ள இந்த இடத்தில் கூறுகிறேன். சனாதனம் என்பது வைரஸ் போன்றது. அதை அழிக்க வேண்டும் என்று தமிழகத்தில் ஒருவர் பேசி உள்ளார். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இதை யார் சொன்னார்களோ.. அவர்களுக்கு சொல்கிறேன். உங்களால் சனாதனத்தை அழிக்க முடியாது. அதை அழிக்க நினைத்தால் ஏழுமலையான் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழிந்து போவீர்கள். உங்களை போன்று பலர் வந்து சென்றுவிட்டனர். சனாதனம் அப்படியே தான் இருக்கிறது' என்று பேசினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாழ்த்து

சனாதன ஆதரவு, உதயநிதி கருத்துக்கு எதிர்ப்பு என்ற பவன் கல்யாண் நிலைப்பாடு தற்போது அ.தி.மு.க.,வுக்கு வாழ்த்து என்ற கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தமது டுவிட்டர் பதிவில் அ.தி.மு.க.,வை சிலாகித்தும், அதன் நிறுவனர் எம்.ஜி.ஆரை புகழ்ந்தும் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இதற்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி நன்றி தெரிவித்து இருந்தார். மறுநாள் எம்.ஜி.ஆர்., குறித்து அளித்த பேட்டிகள் அடங்கிய வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். அவரின் இந்த பதிவுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

புகழாரம்

இந்நிலையில், அ.தி.மு.க.,வின் நிறுவன நாளை முன்னிட்டு, இன்று அக்கட்சியையும், அதன் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரையும் புகழ்ந்து 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில், பதிவு ஒன்றை பவன் கல்யாண் வெளியிட்டு உள்ளார்.

அந்த பதிவில் பவன் கல்யாண் கூறியதாவது: அ.தி.மு.க., 53ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நன்நாளில், அதனது பொதுச்செயலாளர் பழனிசாமி, தலைமைக்கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர்., தொடங்கிய அ.தி.மு.க., தமிழகத்தில் மிக குறுகிய காலத்தில் ஆற்றல்மிக்க அரசியல் சக்தியாக உயர்ந்து ஆட்சி கட்டிலிலும் அமர்ந்து வரலாறு படைத்தது. தொலைநோக்கு கொண்ட அவரது எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களே அவரது பெருமைக்கு இன்றும் சான்றாக திகழ்கின்றன. நல்லாட்சிக்கும் நிர்வாகத்திற்கும் எம்.ஜி.ஆர்., எனது ஆசானாக நான் கருத இதுவே காரணம்.

அவரது மறைவுக்கு பிறகு அவர் விட்டுச்சென்ற பாரம்பரியத்தை கட்டிக்காத்ததோடு மட்டுமல்லாது தொலைநோக்கு கொண்டு தனது நிகரில்லா தலைமையால் மேலும் பல சாதனைகளை படைத்த பெருமை ஜெயலலிதாவை சாரும். அண்டை மாநில மக்கள் மீது அவர் கொண்டிருந்த மரியாதை போற்றுதலுக்குறியது.

பழனிசாமி தலைமையின் கீழ், எம்.ஜி.ஆரின் கொள்கைகளை அ.தி.மு.க., தொடர்ந்து காப்பாற்றி வருகிறது. பல சவால்களை எதிர்கொண்டிருக்கும் போதிலும் இக்கட்சி தமிழகத்தின் அடித்தட்டு மக்களின் உரிமைக்குரலாய் எம்.ஜி.ஆர்., வழியில் இன்றும் திகழ்கிறது.

ஜெயலலிதாவின் காலத்திலும், அவரது மறைவுக்கு பிறகும் அ.தி.மு.க., அரசின் முதல்வராக, அவரது வழியில் சிறப்பாக செயலாற்றிய பன்னீர்செல்வத்திற்கும் இந்நன்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எனது ஜனசேனா கட்சி சார்பாக அ.தி.மு.க., தொண்டர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் பவன் கல்யாண் கூறியுள்ளார்.

என்ன காரணம்


சனாதன விவகாரத்தில், உதயநிதியை விமர்சித்து பேசிய பவன் கல்யாண், தற்போது அ.தி.மு.க.,வை தொடர்ந்து புகழ்ந்து பேசி வருகிறார். இதற்கான காரணம் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அதில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us