ADDED : அக் 29, 2024 11:36 PM
சென்னை:தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு நல நிதி செலுத்துவோரின் குழந்தைகள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு அறிக்கை:
தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு, வாரியம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, 1,000 முதல் 12,000 ரூபாய் வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், புத்தகம் வாங்க உதவித்தொகை, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
இதைப்பெற, தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவித்தொகை பெற, தொழிலாளியின் மாத ஊதியம், 35,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க டிசம்பர், 31 கடைசி நாள். விண்ணப்பங்களை, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், www.lwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.