தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/விபத்தில் தொழிலாளி பலி உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் தொழிலாளி பலி உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் தொழிலாளி பலி உடல் உறுப்புகள் தானம்


ADDED : நவ 25, 2026 10:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 10:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி, இரட்டை பனங்காடை சேர்ந்த, செல்வராஜ் மகன் கர்ணா, 25. கட்டட தொழிலாளி. இவர் கடந்த, 22ல் நண்பர்களுடன் அத்தனுார்பட்டி ஏரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், இன்று (நவ.,25) மூளைச்சாவு அடைந்தார்.

அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக, குடும்பத்தினர் தெரிவித்தனர். பின் தமிழக உடல் உறுப்பு மாற்று ஆணைய வழிகாட்டுதல்படி, கர்ணாவின் இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவை, அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன.

இதயம், கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை, ஒரு சிறுநீரகம், ஈரோடில் உள்ள தனியார் மருத்துவமனை, மற்றொரு சிறுநீரகம், கண்கள், சேலம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.

மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கர்ணாவின் உடலுக்கு, மருத்துவர்கள் மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கர்ணாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us