sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சொத்து குவிப்பு வழக்கு: வீடியோ கான்பரன்சில் : பதிலளிக்க கோரிய ஜெ. மனு மீது 12ம் தேதி தீர்ப்பு

/

சொத்து குவிப்பு வழக்கு: வீடியோ கான்பரன்சில் : பதிலளிக்க கோரிய ஜெ. மனு மீது 12ம் தேதி தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கு: வீடியோ கான்பரன்சில் : பதிலளிக்க கோரிய ஜெ. மனு மீது 12ம் தேதி தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கு: வீடியோ கான்பரன்சில் : பதிலளிக்க கோரிய ஜெ. மனு மீது 12ம் தேதி தீர்ப்பு


ADDED : ஆக 09, 2011 12:39 AM

Google News

ADDED : ஆக 09, 2011 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : சொத்துக் குவிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாமல், வீடியோ கான்பரன்ஸ் முலம், பதிலளிக்க அனுமதி கோரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு, ஆகஸ்ட் 12 ம் தேதி வழங்கப்படுகிறது.

பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பதிலளிக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதி கோரிய மனு, நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. ஜெ., வழக்கறிஞர் குமார்: தமிழகத்தில் சட்டசபைக் கூட்டம் நடந்து வரும் நிலையில், முதல்வருக்கு வேலைப் பளு அதிகம் உள்ளது. அவரது பாதுகாப்புக் கருதி, நேரில் ஆஜராகாமல் வீடியோ கான்பரன்ஸ் மூலம், பதில் பெற வேண்டும். குற்றம் சுமத்தப்பட்டவர்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம், பதில் தரலாம் என, 2009 ல் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. பல்வேறு மாநில ஐகோர்ட்டுகளும் தீர்ப்பளித்துள்ளன. அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா: ஜெயலலிதா முதல்வராக இருப்பதால், வேலைப்பளு இருப்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், பாதுகாப்புக் கருதி வரமுடியவில்லை என்பதை, ஏற்றுக்கொள்ள முடியாது. சில மாதங்களுக்கு முன், மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு அவர் வந்துள்ளார். இந்த வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றிய போது, காவிரி பிரச்னை இருப்பதால், நேரில் ஆஜராக முடியாது என, காரணம் கூறினர். தற்போது இவ்வழக்கு, காவிரி நடுவர் மன்றத்தில் உள்ளதால், கர்நாடகா வருவதில் பிரச்னை இருக்காது. இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்ற, சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்க வேண்டும். இல்லையென்றால் கோர்ட் அவமதிப்பாகி விடும். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, இம்மனு மீதான தீர்ப்பு, ஆகஸ்ட் 12ம் தேதிக்கு வழங்கப்படும் என்று உத்தரவிட்டார்.








      Dinamalar
      Follow us