ADDED : ஆக 13, 2011 12:40 PM
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஏராளமானவர்கள் தங்கள் நிலத்தை அரசியல் வாதிகள் அபகரித்துக் கொண்டதாக புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து நிலத்தை பறி கொடுத்தவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு துணிச்சலாக வந்து புகார் கொடுத்தனர். நில அபகரிப்பு வழக்கு விசாரணைகள் நடத்த சிறப்பு கோர்ட்டுக்கள் ஏற்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, நில அபகரிப்பு வழக்குகளை மட்டும் விசாரிக்க பிரத்யேகமாக 25 சிறப்பு கோர்ட்டுக்கள் அமைக்கப்படும் என்று ஐகோர்ட்டு ஒப்புதலுடன் அறிவித்தது. இந்த சிறப்பு கோர்ட்டுகள் ஒவ்வொன்றும் ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு தலைமையில் செயல்படும். 7 அதிகாரிகள் ஒவ்வொரு கோர்ட்டு பணியையும் மேற்கொள்வார்கள். ஓராண்டுக்கு இவர்களை தமிழக அரசு தற்காலிகமாக பணியில் அமர்த்தியுள்ளது.