'கூகுள் மேப்' பார்த்து ஓட்டியதால் மார்க்கெட்டுக்குள் புகுந்த லாரி
'கூகுள் மேப்' பார்த்து ஓட்டியதால் மார்க்கெட்டுக்குள் புகுந்த லாரி
UPDATED : பிப் 10, 2025 10:29 AM
ADDED : பிப் 09, 2025 05:21 AM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து டவுசாவுக்கு, 10 சக்கரங்களை கொண்ட பெரிய லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர், வழி தெரியாததால் கூகுள் மேப் உதவியுடன் சென்றார்.
ஆழ்வார் பகுதியில் சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வேறு பாதையை கூகுள் மேப் காட்டியதால், அங்குள்ள மிகவும் பரபரப்பான துங்கா மார்க்கெட்டுக்குள் லாரி புகுந்தது.
மிக குறுகலான பாதையில் சிக்கியதோடு, லாரி மோதியதால் அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட கடைகள், வாகனங்கள் சேதமடைந்தன. கூகுள் மேப்பை நம்பி, தவறான ரூட்டில் வந்ததை அறிந்த லாரி டிரைவர், அங்கிருந்து ஓடி விட்டார்.
மார்க்கெட்டில் புகுந்த லாரியால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வியாபாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில், அதிகாரிகளும், போலீசாரும் வந்து, கிரேன் வாயிலாக லாரியை அப்புறப்படுத்தினர் ஏழு மணி நேரம் நீடித்த களேபரத்துக்கு பின், துங்கா மார்க்கெட் பகுதி சகஜ நிலைக்கு திரும்பியது.
கூகுள் மேப் பார்த்து, லாரியை ஓட்டிச் சென்ற டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.