sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடந்த வார கொலை பட்டியல்

/

கடந்த வார கொலை பட்டியல்

கடந்த வார கொலை பட்டியல்

கடந்த வார கொலை பட்டியல்


ADDED : செப் 22, 2024 01:15 AM

Google News

ADDED : செப் 22, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

15.09.2024 - 21.09.2024 வரை

 சென்னை துரைப்பாக்கத்தில், மாதவரத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி தீபா, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற பொறியாளரால் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார்

 சென்னை பெரும்பாக்கம் எழில் நகரில், கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த கலைவாணன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த வசந்த் உள்ளிட்ட ஐந்து பேரால் அம்மிக்கல்லை தலையில் போட்டுக் கொல்லப்பட்டார்

 காஞ்சிபுரம் கம்பர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி அலமேலு, திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே கொளத்துார் ஏரி பகுதியில், போலி சாமியாரால் கழுத்து அறுத்து கொல்லப்பட்டார்

 ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மவுனிகா, வாலிபர் ஒருவருடன் திருவண்ணாமலை மாவட்டம் அருணாசலேஸ்வரர் கோவில் அருகே மடத்தில் தங்கி இருந்த போது, துாக்கில் தொங்கினார். கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது

 சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த பசுபதி, குடும்ப பிரச்னை காரணமாக, மாமியார் பாண்டியலட்சுமி, மூதாட்டி சொர்ணமுத்து ஆகியோரை வெட்டிக் கொன்றார்

 செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரைச் சேர்ந்த டாக்டர் குமரகுருபரன், மேல்மருவத்துாரில் உள்ள வீட்டில் எரிந்த நிலையில் கிடந்தார். கொலையா என விசாரணை நடக்கிறது

 திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாகரல் பகுதியைச் சேர்ந்த வேலு, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், அவரது மனைவி சுமதியை வெட்டிக் கொன்றார்

 மணலி ஹரிகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொல்லப்பட்டார்

 சென்னை அருகே பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் அஜித்குமார் என்பவர், இரவல் கொடுத்த இருசக்கர வாகனத்தை கேட்டதற்காக, நண்பர் ஜெயம் என்பவரால் குத்திக் கொல்லப்பட்டார்

 தேனி அருகே பின்னத்தேவன்பட்டியைச் சேர்ந்த ஜோதியம்மாள், கணவரை பிரிந்து 15 வயது மகளுடன் வசித்து வந்தார். கூலி வேலைக்கு சென்றபோது, தன்னை கேலி செய்ததாக முருகேஸ்வரி என்பவரை அரிவாளால் வெட்டினார். இதனால், ஆத்திரமடைந்த முருகேஸ்வரியின் உறவினர்கள், ஜோதியம்மாளை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்றனர்

 காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில், செம்பாக்கத்தைச் சேர்ந்த காணிக்கைராஜ், வினோத் என்பவரால் அடித்துக் கொல்லப்பட்டார்

 கோவை அருகே சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், காதலனுடன் தங்கிய கோவை கள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கீதா அடித்துக் கொல்லப்பட்டார்

 தேனி மாவட்டம் போடி அருகே ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, சொத்தில் பங்கு கேட்டு குடிபோதையில் தகராறு செய்த மகன் சுகுமாரை, கத்தியால் குத்திக் கொன்றார்

 துாத்துக்குடி மாவட்டம், மறவன்மடத்தைச் சேர்ந்த முருகன், முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்டார்

 சேலம் மாவட்டம் ஆலச்சம்பாளையம் பகுதியில், மகள்வழி பேரனால் 80 வயது மூதாட்டி வள்ளியம்மாள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்

 வேலுார் மாவட்டம் குடியாத்தம் அருகே ஏரிப்பட்டியைச் சேர்ந்த வசந்தகுமார், திருப்பத்துார் மாவட்டம் மாதவனுாரைச் சேர்ந்த நண்பர் யோகராஜிடம் வாங்கிய 14,000 ரூபாய் கடன் பிரச்னையில், அவரின் 6 மற்றும் 4 வயது மகன்களை கடத்திச் சென்று கழுத்தை நெரித்துக் கொன்றார்.






      Dinamalar
      Follow us