இரண்டு கல்யாண் ஜுவல்லர்ஸ் விற்பனை நிலையங்கள் துவக்கம்
இரண்டு கல்யாண் ஜுவல்லர்ஸ் விற்பனை நிலையங்கள் துவக்கம்
ADDED : அக் 26, 2024 08:32 PM
சென்னை:தங்கம் விற்பனையில் முன்னணியில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ், திருவள்ளூர் மற்றும் திருநெல்வேலியில், இன்று புதிய விற்பனை நிலையங்களை துவக்குகிறது. புதிய விற்பனை நிலையங்களின் அறிமுக விழாவில், கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பர துாதரான பிரபல நடிகர் பிரபு, நடிகை ரெஜினா கசாண்ட்ரா பங்கேற்கின்றனர்.
திருநெல்வேலி - திருவனந்தபுரம் சாலையில் அமைந்திருக்கும், புதிய விற்பனை நிலைய திறப்பு விழா, மதியம் 12:00 மணிக்கும், திருவள்ளூர் ஜே.என்., சாலையில், புதிய விற்பனை நிலையம் துவக்க விழா, மாலை, 6:00 மணிக்கும் நடக்க உள்ளது. புதிய விற்பனை நிலையங்களின், துவக்கத்தை கொண்டாடும் வகையில், கல்யாண் ஜுவல்லர்ஸ், பல சலுகைகளை அறிவித்துள்ளது.
தீபாவளி கொண்டாட்ட சலுகையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் தங்கத்தினால் மட்டும் செய்யப்பட்ட நகைகளுக்கான செய்கூலி கட்டணத்தில், 40 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும். பழங்கால நகைகள் மற்றும் பிரீமியம் தர நகைகளுக்கான செய்கூலி கட்டணத்தில், 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. டெம்பிள் நகைகளுக்கான செய்கூலி கட்டணத்தில், 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கல்யாண் ஜுவல்லர்சின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் வாங்கும், 30 கிராமுக்கு கீழ் உள்ள அனைத்து நகைகளுக்கும், 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இது குறித்து, கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனர் ரமேஷ் கல்யாணராமன் கூறியதாவது:
தமிழகத்தில் துவக்கப்பட்டுள்ள புதிய விற்பனை நிலையங்கள், மாநிலத்தில், ஆபரண சந்தையில், எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளை அதிகரிக்க உதவும். கல்யாண் ஜுவல்லர்சின் முக்கிய சந்தைகளில் ஒன்றாக, தமிழகமும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
புதிய முதலீடுகள், வாடிக்கையாளருக்கு மிகச் சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை, தொடர்ந்து வழங்க வேண்டும் என, நாங்கள் கொண்டிருக்கும் அக்கறையையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.