தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/எஸ்.எஸ்.ஐ.,யை தாக்கிய சட்டக்கல்லுாரி மாணவர் கைது

எஸ்.எஸ்.ஐ.,யை தாக்கிய சட்டக்கல்லுாரி மாணவர் கைது

எஸ்.எஸ்.ஐ.,யை தாக்கிய சட்டக்கல்லுாரி மாணவர் கைது


ADDED : ஜன 19, 2024 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2024 07:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் ரோந்து சென்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய சட்டக்கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், 52; திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டரான இவர் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு போலீசாருடன் ரோந்து சென்றார்.

திருவெண்ணெய்நல்லுார் கள்ளுக்கடை சந்திப்பு அருகே சென்றபோது, அங்கு குடிபோதையில் இருந்த வாலிபர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜனை தாக்கினார். தடுக்க முயன்ற பெண் தலைமை காவலர் வரலட்சுமியையும் தாக்கினார்.

பின்னர் போலீசார், அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர் திருவெண்ணெய்நல்லுார், காந்திநகர் அழகுநாதன் மகன் செந்தில்குமார், 32; விழுப்புரம் சட்டக் கல்லுாரியில் படித்து வருவதும் தெரியவந்தது.

இதுகுறித்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் அளித்த புகாரின்பேரில், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண்ணை தாக்கியது உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து, சட்டக்கல்லுாரி மாணவர் செந்தில்குமாரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us