sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தலைவர்கள் தைப்பொங்கல் வாழ்த்து

/

தலைவர்கள் தைப்பொங்கல் வாழ்த்து

தலைவர்கள் தைப்பொங்கல் வாழ்த்து

தலைவர்கள் தைப்பொங்கல் வாழ்த்து

13


UPDATED : ஜன 15, 2024 05:31 AM

ADDED : ஜன 15, 2024 05:28 AM

Google News

UPDATED : ஜன 15, 2024 05:31 AM ADDED : ஜன 15, 2024 05:28 AM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் இன்று தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நன்நாளில் அரசியல் தலைவர்கள் தங்களுடைய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

கவர்னர் ஆர்.என்.ரவி:

பொங்கல், மகர சங்கராந்தி, உத்தராயன், பவுஷ்பர்வ மற்றும் லோரி ஆகிய விசேஷ தினங்களில், உலகெங்கிலும் உள்ள நம் சகோதர - சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

நாடு முழுதும் ஒற்றுமையாக கொண்டாடப்படும் இந்த அறுவடை திருவிழா, நம் வளமான ஆன்மிக மற்றும் பெருமைக்குரிய பாரம்பரியத்தின் வாழும் சாட்சியாகும். மேலும், கலாசார ஒருமைப்பாடு மற்றும் பாரதத்தை, ஒரே தேசமாக இவை வரையறுக்கின்றன. இந்த பண்டிகைகள் நமக்கு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்து, அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை வளர்க்கட்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.



முதல்வர் ஸ்டாலின்:

'உழவு, தமிழர்களின் தொழில் மட்டுமல்ல, பண்பாட்டு மரபு. அதனால்தான் பல்லாயிரம் ஆண்டுகளாக பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகிறோம்'. 'தை முதல்நாள் உழைப்பின் திருநாளாக, தமிழர் பெருநாளாக கொண்டாடி வருகிறோம். பொங்கல் திருநாள் மட்டுமல்ல, எல்லா நாளும் மகிழ்ச்சிக்குரிய நாள் என சொல்லத்தக்க வகையில் அமையட்டும்' என தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் பழனிசாமி:

தை பிறந்தால் வழி பிறக்கும்; தடைகள் தகரும்; நினைவுகள் நிஜமாகும் உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்:

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப, தமிழ்நாட்டில் மாற்றம் மலர்ந்து மக்களுக்கு வழி பிறக்கட்டும், இல்லங்கள் தோறும் இன்பங்கள் பெருகட்டும், தீமைகள் அகன்று நன்மைகள் செழிக்கட்டும்.

கே.எஸ்.அழகிரி

(தமிழக காங்கிரஸ் தலைவர்): இனம், மண், மக்கள், விளைச்சல், உணவு இவை அனைத்துக்கும் சேர்த்துக் கொண்டாடும் ஒற்றை விழா தான் பொங்கல் பெருவிழா. அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவட்டும்.

ராமதாஸ்

(பாமக நிறுவனர்): தைத்திருநாளும், தமிழ்புத்தாண்டும் தமிழர் வாழ்வில் மகிழ்ச்சியை உருவாக்கட்டும். அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும்.

வைகோ

(மதிமுக பொது செயலாளர்): ஏழை எளியோருக்கு, நலிந்த மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளை வழக்கம் போல வழங்கிடுங்கள். இனிக்கும் பொங்கலை அனைவருக்கும் வழங்கி, பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்தி மகிழுங்கள்.

கமல்ஹாசன்:

(மக்கள் நீதி மய்யம் தலைவர்) இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள், சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக்கொண்டாடும் நாள் என்று, மகிழ்வுகளை அள்ளி வரும் தைப்பொங்கல் நாளில் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புமணி

(பாமக தலைவர்): தைத் திருநாள் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வளர்ச்சியைக் கொடுக்க வேண்டும். அதற்காக உழைக்க இந்த தைத்திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் இயற்கையின் முன் உறுதியேற்றுக் கொள்வோம்.

திருமாவளவன்(

விசிக தலைவர்): தமிழ்ச் சமூகத்தினரால் மட்டுமே பூரிப்புப் பொங்க கொண்டாடப்படும் பெருநாள் என்றாலும், இது விவசாயப்பெருங்குடி மக்களின் விளைச்சல் திருநாளே ஆகும். அதாவது, வேளாண் தொழிலைப் போற்றும் திருவிழாவாகும்.

ஜி.கே.வாசன்(

தமாகா தலைவர்): தை மாதம் பிறந்து தமிழர்கள், விவசாயிகள் வாழ்வில் கடந்த காலத்தில் ஏற்பட்ட துன்பங்கள், துயரங்கள், இழப்புகள், பாதிப்புகள் எல்லாம் மறைந்து புத்தொளி பிறந்து நல்வழி பிறக்கட்டும்.

கே.பாலகிருஷ்ணன்(

சிபிஎம் மாநில செயலாளர்): பொங்கல் திருநாள் உழைப்பின் உன்னதத்தை உயர்த்தி பிடிக்கிற சிறப்புமிக்க பண்டிகை. இந்த நன்னாளில் மக்கள் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்திட அனைவரும் உறுதியேற்போம்.






      Dinamalar
      Follow us