அதானி மீது சட்டபூர்வமான நடவடிக்கை; திருமாவளவன் வலியுறுத்தல்
அதானி மீது சட்டபூர்வமான நடவடிக்கை; திருமாவளவன் வலியுறுத்தல்
ADDED : நவ 22, 2024 01:51 PM

சென்னை: அதானி மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில், நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: அதானியை பற்றி ஏற்கனவே, ஹிண்டன்பர்க் அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. பங்கு சந்தையில் அவர் எப்படி, ஊழல் திமிங்கலமாக இருக்கிறார் என்பதை கடந்தாண்டு ஹிண்டன்பர்க் அறிக்கை அம்பலப்படுத்தியதை நாம் அறிவோம். அப்போதே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியது. ஆனால் மோடி அரசு அதானி அரசாகவே இயங்கி வருகிறது.
பங்குசந்தை ஊழல்
பார்லிமென்டில் அதானி பற்றி, பேசினாலே ஆளுங்கட்சி தரப்பில் கொந்தளிக்கிறார்கள். அவரை பற்றி ஏதாவது பேசினால், அதை அவை குறிப்பில் இருந்து நீக்க கூடிய அளவுக்கு, ஆத்திரப் படுகிறார்கள். இன்று உலக அளவில், இந்த தேசம் தலை குனிய கூடிய, ஒரு பங்குசந்தை ஊழலில், அதானி ஈடுபட்டு இருப்பது வெட்ககேடானது. ராகுல் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். வி.சி.க.,வும் அதானி மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.