ADDED : ஜன 13, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் என் பெயரை குறிப்பிட்டு, டங்ஸ்டன் சுரங்கம் வர, தம்பிதுரையின் பேச்சே காரணம் என்று தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் நான் பேசும் போது, நெய்வேலி போராட்டம் நடக்கிறது. எனவே, விவசாய நிலங்களை எடுக்க வேண்டாம் என்றேன். அப்படி இருக்கும் போது, எப்படி டங்ஸ்டனுக்கு நிலம் எடுக்கச் சொல்வேன். டங்ஸ்டன் பற்றி நான் ஒரு வார்த்தை கூட பார்லிமென்டில் பேசவில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதேபோல, ஸ்டாலின் ஆதாரம் காட்ட வேண்டும். சட்டசபையில் நான் உறுப்பினராக இல்லாத நேரத்தில், என்னை பற்றி தவறான செய்தியை கொடுத்த முதல்வர் ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.
- தம்பிதுரை
ராஜ்யசபா அ.தி.மு.க., - எம்.பி.,