sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓட்டு வங்கியை விஜய் நிரூபிக்கட்டும்: ராகுலை சமாதானப்படுத்திய கார்கே

/

ஓட்டு வங்கியை விஜய் நிரூபிக்கட்டும்: ராகுலை சமாதானப்படுத்திய கார்கே

ஓட்டு வங்கியை விஜய் நிரூபிக்கட்டும்: ராகுலை சமாதானப்படுத்திய கார்கே

ஓட்டு வங்கியை விஜய் நிரூபிக்கட்டும்: ராகுலை சமாதானப்படுத்திய கார்கே

35


ADDED : மார் 05, 2026 06:15 AM

Google News

35

ADDED : மார் 05, 2026 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'த.வெ.க., தன் ஓட்டு வங்கியை நிரூபிக்கட்டும்; விஜய்க்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தால், அடுத்து வரும் தேர்தலில் கூட்டணி வைக்கலாம்' என கூறி, காங்., - எம்.பி., ராகுலை, அக்கட்சியின் தலைவர் கார்கே சமாதானப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில், 2016ல் போட்டியிட்டது போல் 41 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் தர வேண்டும் என காங்கிரஸ் பிடிவாதமாக இருந்ததால், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடித்தது.

காங்கிரசின் கோரிக்கைகளை நிராகரித்த முதல்வர் ஸ்டாலின், 'ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு சரிப்பட்டு வராது' என்றார். அது மட்டுமல்லாது, 'தமிழகத்தில் காங்கிரசுக்கு எந்த கட்டமைப்பும் இல்லை. எனவே, அக்கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினால், அ.தி.மு.க., கூட்டணியின் வெற்றிக்கு வழி வகுத்துவிடும்' எனவும் தி.மு.க.,வினர் பேசி வந்தனர்.

இதனால் கோபமடைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். 'கடந்த 22 ஆண்டுகளாக தி.மு.க., கூட்டணியில் இருப்பதால், காங்கிரசுக்கு எந்த பலனும் இல்லை.

'த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்தால் இளைஞர்களின் ஆதரவை பெற முடியும்; காங்கிரசை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்' என ராகுல் கூறியுள்ளார்.

அதை தொடர்ந்தே, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், எம்.பி., மாணிக்கம் தாகூர், காங்கிரசின் தரவு மற்றும் பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர், தி.மு.க.,வை சீண்டும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், மூத்த தலைவர் சிதம்பரம் வழியாக காங்., தலைவர் கார்கேவிடம் தி.மு.க., பேச்சு நடத்தியது. பின்னர் ராகுலிடம் பேசிய கார்கே, 'வரும் தேர்தலில் த.வெ.க., தன் ஓட்டு வங்கியை நிரூபிக்கட்டும்; அதன் பின், அடுத்து வரும் தேர்தல்களில் அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து யோசிக்கலாம்.

'தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், 22 ஆண்டு கால கூட்டணியை முறிப்பது, காங்கிரஸ் மீதான நம்பகத்தன்மையை குறைத்து விடும். 'பார்லிமென்டில் மோடி அரசை எதிர்கொள்ள, தி.மு.க.,வின் எம்.பி.,க்கள் பலமும் நமக்கு தேவை' என கூறி சமாதானப்படுத்தி உள்ளார். அதை தொடர்ந்தே, தி.மு.க., காங்கிரஸ் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக, காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us