பறவைகளுக்கு உணவு கொடையளிப்போம்; படம் வெளியிட்டு முதல்வர் வேண்டுகோள்
பறவைகளுக்கு உணவு கொடையளிப்போம்; படம் வெளியிட்டு முதல்வர் வேண்டுகோள்
ADDED : மார் 31, 2025 10:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ''கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடை அளிப்போம்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பகல் நேரங்களில் வெளியில் செல்வதை பலரும் தவிர்த்து வருகின்றனர். உடல் வெப்பத்தை தணிக்க தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர், நுங்கு பயன்படுத்த துவங்கி உள்ளனர்.
அதேநேரத்தில் பறவைகளும் கோடை வெயிலால் அவதி அடைகின்றனர். இந்நிலையில், பறவைகளுக்கு உணவு அளிக்கும் படத்தை சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளனர். ''கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடை அளிப்போம்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.