திமுகவின் அவல ஆட்சியை அம்பலப்படுத்துவோம்: அண்ணாமலை
திமுகவின் அவல ஆட்சியை அம்பலப்படுத்துவோம்: அண்ணாமலை
UPDATED : மார் 14, 2024 06:24 PM
ADDED : மார் 14, 2024 02:46 PM

சென்னை: திமுகவின் அவல ஆட்சியை அம்பலப்படுத்திக்கொண்டு தான் இருப்போம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான, முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டு சுமார் ஒரு மாதம் ஆகிறது. தமிழகத்தில் உள்ள போதைப்பொருள் புழக்கம் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகரித்து விட்டது என்ற உண்மையைக் கூறியதற்காக என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.தினசரி செய்திகளைப் படிக்கும் வழக்கம் இருக்கிறதா முதல்வர் அவர்களே?
மக்களுக்கு திமுக ஆட்சியின் அவலம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, அவதூறு வழக்கு தொடர்ந்து எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது. தொடர்ந்து மக்கள் மத்தியில் உங்கள் அவல ஆட்சியை அம்பலப்படுத்திக்கொண்டு தான் இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

