sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தெரிந்து கொள்வோமா திருச்செந்துாரை...

/

தெரிந்து கொள்வோமா திருச்செந்துாரை...

தெரிந்து கொள்வோமா திருச்செந்துாரை...

தெரிந்து கொள்வோமா திருச்செந்துாரை...

6


ADDED : அக் 27, 2025 03:51 AM

Google News

6

ADDED : அக் 27, 2025 03:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே இருந்தது திருச்செந்துார். அதை இரண்டாம் படைவீடு என அழைக்கிறோம்.

* முருகனின் அவதார நோக்கமான சூரசம்ஹாரம் நிறைவேறிய ஊர் திருச்செந்துார்.

* அறுபடை கோயில்களில் பெரியது திருச்செந்துார்.

* திருச்செந்துாரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கியும், சண்முகர் தெற்கு நோக்கியும் உள்ளனர்.

* காவல் தெய்வமாக வீரபாகு உள்ளதால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என பெயருண்டு. வீரபாகுவுக்கு பூஜை நடந்த பிறகே மூலவருக்கு பூஜை நடக்கிறது.

* பாலசுப்பிரமணியருக்கு வெள்ளை நிற ஆடையும், சண்முகருக்கு பச்சை நிற ஆடையும் அணிவிக்கின்றனர்.

* மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் வழிபட்ட பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம். இந்த அறையின் பெயர் 'பாம்பறை'.

* கோயிலின் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் குழந்தை பாக்கியத்திற்காக தொட்டில் கட்டுகின்றனர்.

* சண்முகர், ஜெயந்தி நாதர், குமர விடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்ஸவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை 'மாப்பிள்ளை சுவாமி' என்பர்.

* ராஜ கோபுரம் 17ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகள் கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.

* திருச்செந்துார் மீது அருணகிரிநாதர் 83 திருப்புகழ் பாடல்கள் பாடினார். இதை பாடினால் கந்தலோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.

* திருச்செந்துார் கோயிலின் அமைப்பு பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் உள்ளது.

* சண்முக விலாசம் என்னும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. இதனை 124 துாண்கள் தாங்குகின்றன.

* 24 அடி ஆழம் கொண்ட நாழிக்கிணறில் நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும்.

* மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் திருச்செந்துார் கோயில் திருப்பணிக்காக தங்களின் வாழ்நாளை அர்ப்பணித்தனர். இவர்களின் சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.

* மன்னார் வளைகுடாவின் கரை ஓரத்தில் அலைகள் தழுவ அமைந்திருப்பதால் 'அலைவாய்' எனப்பட்டது.

* கோயிலுக்குச் செல்லும் வழியில் துாண்டுகை விநாயகர் இருக்கிறார். இவரை வணங்கிய

பின் முருகனை வணங்க வேண்டும்.

* மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை வேல் பிளவுபடுத்திய இடம் திருச்செந்துாரில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ள 'மாப்பாடு'(மாமரத்தை பிளந்ததால்). அது தற்போது மணப்பாடாகி மாறியது.

* மூடிய ராஜகோபுரம் சூரசம்ஹாரம் முடிந்த, மறுநாளில் நடக்கும் தெய்வானை திருமணத்தின் போது திறக்கப்படும்.

* அதிகாலையில் நடக்கும் விஸ்வரூப தரிசனத்தை (நிர்மால்ய பூஜை) பார்ப்பது விசேஷம்.

* கால அடிப்படையில்

ஆதிசங்கரர், அருணகிரிநாதர், குமரகுருபரர், பகழிக் கூத்தர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட பல அடியார்கள் திருச்செந்துாரானின் அருள் பெற்றவர்கள்.

* செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என பெயருண்டு.

* வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி ஜக்கம்மாவும் தங்க நகைகளை முருகப்பெருமானுக்கு காணிக்கை அளித்தனர்.

* திருச்செந்துாரில் உச்சிக்கால பூஜை முடிந்து மணி ஒலித்த பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் மதிய உணவு சாப்பிடுவார். அதற்காக 100 கிலோ எடை கொண்ட மணியை ஒலிக்கச் செய்தார். ராஜகோபுரம் 9ம் அறையில் இது உள்ளது.






      Dinamalar
      Follow us