‛மீண்டும் பள்ளிக்கூடம் போகலாம்': தமிழகத்தில் ஜூன் 6ல் பள்ளிகள் திறப்பு
‛மீண்டும் பள்ளிக்கூடம் போகலாம்': தமிழகத்தில் ஜூன் 6ல் பள்ளிகள் திறப்பு
UPDATED : மே 24, 2024 01:40 PM
ADDED : மே 24, 2024 01:14 PM

சென்னை: தமிழகத்தில் 2024 -25ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு வரும் ஜூன் 6ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் முடிந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2024 - 25ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 6 ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
அனைத்து பள்ளிகளையும் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்கவும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.