sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அ.தி.மு.க., ஆட்சியில் மனம் குளிர செய்வோம்! தொழில்துறையினருக்கு  இ.பி.எஸ்., உறுதி

/

அ.தி.மு.க., ஆட்சியில் மனம் குளிர செய்வோம்! தொழில்துறையினருக்கு  இ.பி.எஸ்., உறுதி

அ.தி.மு.க., ஆட்சியில் மனம் குளிர செய்வோம்! தொழில்துறையினருக்கு  இ.பி.எஸ்., உறுதி

அ.தி.மு.க., ஆட்சியில் மனம் குளிர செய்வோம்! தொழில்துறையினருக்கு  இ.பி.எஸ்., உறுதி

23


UPDATED : ஜூலை 09, 2025 04:26 AM

ADDED : ஜூலை 09, 2025 04:25 AM

Google News

23

UPDATED : ஜூலை 09, 2025 04:26 AM ADDED : ஜூலை 09, 2025 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை துவக்கியுள்ள, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தொழில் அமைப்பினர், விமான நிலைய விரிவாக்கத்துக்கு இடம் கொடுத்தவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், தங்க நகை தொழிலாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோரை நேற்று, ரேஸ்கோர்ஸில் உள்ள ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, பல்வேறு தரப்பினரும், தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.Image 1440908

அதற்கு பதிலளித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:


குறு, சிறு தொழில்களுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. தற்போது, தொழில் செய்ய முடியாத சூழல் நிலவுவதாக புகார்கள் வருகின்றன. கொரோனா காலத்திலும் பல்வேறு உதவிகள் செய்து, தொழில்துறையை காப்பாற்றினோம்.

இன்றைய அரசு, கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. வருகின்ற பிரச்னைகளையும் தீர்ப்பதாக இல்லை. புதிதாக பிரச்னைகளை அளிக்கும் அரசாக இருக்கிறது என்று நான் சொல்லவில்லை; நீங்களே சொல்கிறீர்கள்.

பருத்தி மகசூலை அதிகரிக்கவும், பருத்தி எடுப்பதை இயந்திரமயமாக்குவது, சீனாவைப் போல வண்ணப் பருத்தி உற்பத்தி குறித்தும் ஆய்வு செய்தோம். ஆட்சி மாற்றத்தால் அவை கைகூடவில்லை. என் ஆட்சிக் காலத்தில் ஒரு புறம் வறட்சி, ஒரு புறம் புயல் வெள்ளம், கொரோனா என பேரிடர்கள் நிகழ்ந்தன. ஒரு நாள் கூட நிம்மதியாக இல்லை. அவ்வளவு கஷ்டத்திலும், தொழில்துறை நலிவடையாமல் பார்த்துக் கொண்டோம்.

விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்தோம். குடிமராமத்து திட்டம் கொண்டு வந்து, நீர்நிலைகளை பாதுகாத்தோம். விமான நிலைய விரிவாக்கத்தை பொறுத்தவரை, தொழில் நகரான கோவைக்கு விரிவாக்க நடவடிக்கைகள் அவசியம். எல்லாவற்றிலும் சிக்கலை ஏற்படுத்தும் தி.மு.க., அரசு, இதிலும் சிக்கலை ஏற்படுத்தியது. பணிகள் முடங்கின.

ஸ்கூட்டர் மானியம்


மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், விரிவாக்கப் பணி துரிதமாக நிறைவடையும். சுய உதவி குழுவினரின் கோரிக்கை கனிவோடு பரிசீலிக்கப்படும். ஸ்கூட்டர் மானியம் மீண்டும் வழங்கப்படும். கிரில் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை, சம்பந்தப்பட்ட துறையோடு கலந்து பேசி, சாத்தியமாக்க பரிசீலிக்கப்படும்.

வரும் தேர்தலில் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியமைக்கும். தொழில்துறையினரின் நிலைக்கட்டணம் உட்பட அனைத்து கோரிக்கைகளும் கனிவுடன் பரிசீலிக்கப்படும். தொழில்துறை மட்டுமின்றி, அனைத்து துறையினரின் மனதையும் குளிரச் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜுனன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயராம், தாமோதரன், அருண்குமார், முன்னாள் மேயர் வேலுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

'ராணுவ தளவாட உற்பத்தி

தொழிற்சாலை அமைப்போம்'''அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் ஐந்து இடங்களில், ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்க உள்ளதாக, மத்திய அரசு அறிவித்தது. ஆட்சி மாற்றத்துக்குப் பின், தி.மு.க., அரசு மத்திய அரசுடன் இணக்கமாக செல்லாததால், திட்டங்கள் கிடைப்பதில்லை. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையும். அப்போது மத்திய அரசுடன் இணக்கத்தைப் பேணி, அந்த ஐந்து ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்போம்,'' என்றார் பழனிசாமி.








      Dinamalar
      Follow us