'அமலாக்க துறைக்காக கதவை திறந்தே வைத்திருப்போம்': துரைமுருகன்
'அமலாக்க துறைக்காக கதவை திறந்தே வைத்திருப்போம்': துரைமுருகன்
ADDED : பிப் 05, 2024 01:44 AM

வேலுார்: ''அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் எங்கள் வீட்டிற்கு வரலாம்; நாங்கள் வீட்டின் கதவை திறந்தே வைத்திருப்போம்,'' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலுார் மாவட்டம், காட்பாடியில் நேற்று அவர் கூறியதாவது:
கர்நாடகா, தமிழகத்திற்கு தண்ணீரை தரும். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; அரசியல் கட்சி துவங்கலாம். யார் வேண்டுமானாலும் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம்.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, 'தமிழகம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளது' என, கூறியுள்ளார். அவர் பொருளாதார வல்லுனரா? பொருளாதார வல்லுனர்கள் எல்லாம், தமிழக பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக கூறுகின்றனர்.
அண்ணாமலை கூறுவது போல், அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் எங்கள் வீட்டிற்கு வரலாம். நாங்கள் வீட்டின் கதவை திறந்தே வைத்திருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை, ''நான் லக்கோவில் எம்.பி.ஏ., பைனான்ஸ் படித்து, 99.4 சதவீதம் பெற்றுள்ளேன். துரைமுருகனை விட, பொருளாதாரம் பற்றி நான் பேசலாம்,'' என, தெரிவித்துள்ளார்.

