ADDED : பிப் 01, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டையை காணவில்லை.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு, மத்திய தேர்தல் கமிஷன் சார்பில், அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
அதை புதுப்பிக்க, உள்துறைக்கு தபாலில் அனுப்புவதற்காக, கடந்த 22ம் தேதி, உதவியாளர் எடுத்துச் சென்ற போது, அடையாள அட்டை தொலைந்து விட்டது.
இதுகுறித்து, சத்யபிரதா சாஹுவின் நேர்முக உதவியாளர் சரவணன், 29ம் தேதி, சென்னை கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
புதுடில்லி பயணம்: லோக்சபா தேர்தல் குறித்த ஏற்பாடுகளை அறிந்து கொள்வதற்காக, சத்யபிரதா சாஹுவுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்று, அவர் நேற்று முன்தினம் டில்லி சென்றார். நேற்று தேர்தல் கமிஷனர்களை சந்தித்து பேசினார்.