தி.மு.க., அரசை அகற்ற தீர்மானம் ஏற்போம்: சிவராஜ் சவுகான் அறிவுரை
தி.மு.க., அரசை அகற்ற தீர்மானம் ஏற்போம்: சிவராஜ் சவுகான் அறிவுரை
ADDED : ஜூலை 06, 2024 06:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ‛‛ தி.மு.க., அரசை அதிகாரத்தில் இருந்து அகற்ற இளைஞர்கள் தீர்மானம் ஏற்க வேண்டும்'' என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசினார்.
சென்னையில் நடந்த பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: தமிழக இளைஞர்களின் வாழ்க்கையை தி.மு.க., அரசு அழிக்கிறது. அதிகாரத்தில் இருந்து தி.மு.க., அரசை அகற்ற இளைஞர்கள் தீர்மானம் ஏற்க வேண்டும். நேற்று அரசியல் தலைவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மாநிலத்தை, தி.மு.க., அரசு குழப்பத்தில் தள்ளுகிறது. மாநிலத்தின் வளர்ச்சி, ஏழைகள் நலனை மாநில அரசு விரும்பவில்லை. 2026ல் பா.ஜ., அரசை கொண்டு வர தீர்மானம் ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.