ADDED : நவ 09, 2024 08:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'ராஜராஜ சோழனின் 1039வது பிறந்தநாளில், பா.ம.க., ஆட்சி அமைய உறுதியேற்போம்' என, தொண்டர்களுக்கு, அக்கட்சியின் தலைவர் அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா, நேற்று கொண்டாடப்பட்டது. கடல் கடந்து வெற்றிகளை குவித்ததன் வாயிலாக, நம் குலப்பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் அவர்.
பாசனத் திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். அவர் வழியில் நாமும் கடுமையாக உழைப்போம். நமது ஆட்சியை தமிழகத்தில் நிறுவுவோம். மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவோம். இது தான் பா.ம.க.,வின் ஒரே எண்ணம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.