எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் 'ஆல்பா ஏ.ஐ., புராசசர்' டிவி
எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் 'ஆல்பா ஏ.ஐ., புராசசர்' டிவி
ADDED : ஜூலை 17, 2025 12:26 AM
சென்னை:எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம், 2025 'ஒஎல்இடி இவோ' மற்றும், 'கியு என்இடி இவோ' டிவி வரிசையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த 'டிவி'க்கள், எல்.ஜி.,யின் சமீபத்திய, 'ஆல்பா ஏ.ஐ., புராசசர் ஜென்2' ல் இயக்கப்படுகின்றன. இது, மேம்படுத்தப்பட்ட படம், ஒலியுடன் தனித்துவமான அனுபவங்களை வழங்குகிறது. எல்.ஜி.,யின் புதுமை மரபை உருவாக்கி, 'ஸ்மார்ட் டிவி.,' அனுபவங்களை புதிய தரத்திற்கு உயர்த்துகிறது.
இது குறித்து, எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ், இந்தியாவின் மீடியா என்டர்டெயின்மென்ட் சொல்யூஷன் இயக்குனர் பிரையன் ஜங் கூறியதாவது:
எல்.ஜி.,யில், 'டிவி.,'யின் எதிர்காலம் நுண்ணறிவால் இயக்கப்படும் தனிப்பயனாக்கத்தில் இருப்பதை நாங்கள் நம்புகிறோம். 2025 ஒ எல்இடி இவோ மற்றும் கியு என்இடி இவோ டிவி வரிசையில், புதிய 'டிவி'.,யை அறிமுகம் செய்வதுடன், வாடிக்கையாளர்களின் அன்றாட அனுபவத்தை உயர்த்தும், சிறந்த சேவைகளையும் அறிமுகம் செய்துள்ளோம். எங்களின் மேம்பட்ட ஆல்பா ஏ.ஐ., புராசசர், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
இவ்வாறு கூறினார்.

