தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நூலக கொள்முதல் முறைகேடில் அமைச்சர் மீதே சந்தேகம்: பா.ஜ.,

நூலக கொள்முதல் முறைகேடில் அமைச்சர் மீதே சந்தேகம்: பா.ஜ.,

நூலக கொள்முதல் முறைகேடில் அமைச்சர் மீதே சந்தேகம்: பா.ஜ.,


ADDED : நவ 18, 2026 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: ‘‘நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடுகளில், அமைச்சர் ராஜ்மோகன் மீதே சந்தேகம் உள்ளது,’’ என, பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று அவர் கூறியதாவது:

நுாலகங்களுக்கு, புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடுகளில், அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக, அமைச்சர் ராஜ்மோகன் கூறுகிறார். எங்களுக்கு ராஜ்மோகன் மீதே சந்தேகம் உள்ளது. இதுகுறித்து, நான் கூறி ஒரு மாதமாகி விட்டது. இப்போதுதான், எஃப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர். இந்த கால தாமதமே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. முன்னதாகவே வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தியிருக்க வேண்டும்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறும் கருத்துகளை, மா.கம்யூ., – எம்.பி., வெங்கடேசன் விமர்சிக்கிறார். ஆனால், கம்யூனிஸ்ட் என கூறும் அவர், விலை உயர்ந்த காரில் வலம் வருகிறார். அது நண்பரின் கார் என அவர் விளக்கம் அளிக்கிறார். எப்போதும், நீதிபதிகளின் கருத்துகளுக்கு, எதிர்க்கருத்து சொல்வது சரியானது அல்ல.

கடந்த நவ. 4ம் தேதி வரை, தமிழகத்திற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய 67 டி.எம்.சி., காவிரி நீர் வரவே இல்லை. இதுகுறித்து, தமிழக முதல்வர் வாய் திறக்கவே இல்லை. கர்நாடகா முதல்வர் சிவகுமாரிடம் கேட்கவும் இல்லை. டில்லியில் புத்தக வெளியீட்டு விழாவில், சிவகுமாரை சந்தித்தபோது கூட, எதுவும் பேசவில்லை. இவையெல்லாம், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் இழைத்த மிகப்பெரிய துரோகம். இரண்டு லட்சம் ஏக்கர் பயிர்கள், தண்ணீர் இன்றி கருகியதற்கு, முதல்வர் தான் முழு பொறுப்பு.

திருச்செந்துார் சூரசம்ஹார விழாவில், முதல்வருக்கு அரோகரா என கோஷமிட்ட விவகாரத்தில், பாடகர் வேல்முருகன் அளித்த விளக்கம் சரியே. அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், தமிழறிஞர் என்று சொல்லிக் கொள்ளும் புஷ்பவனம் குப்புசாமி, பொறுப்பற்ற முறையில் பேசுவது கண்டனத்திற்கு உரியது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us