இரு புதிய காப்பீட்டு திட்டங்கள் எல்.ஐ.சி., நிறுவனம் அறிமுகம்
இரு புதிய காப்பீட்டு திட்டங்கள் எல்.ஐ.சி., நிறுவனம் அறிமுகம்
ADDED : ஜூலை 12, 2025 12:11 AM
சென்னை:எல்.ஐ.சி., நிறுவனத்தின் 'நவ் ஜீவன் ஸ்ரீ, நவ் ஜீவன் ஸ்ரீ ஒற்றை பிரீமியம்' என, இரண்டு காப்பீட்டு திட்டங்களை, அதன் நிர்வாக இயக்குநர் ஸ்ரீ சத்பால் பானு அறிமுகம் செய்தார்.
எல்.ஐ.சி., நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
எல்.ஐ.சி.,யில் புதிதாக துவங்கப்பட்டுள்ள இரு புதிய திட்டங்களும், சேமிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
'நவ் ஜீவன் ஸ்ரீ' திட்டம் இளைய தலைமுறையினரின் கனவுகள், இலக்குகள், பொறுப்புகள் ஆகியவற்றை நிறைவேற்ற பெரிதும் உதவும். இதன் பிரீமியங்களை 6, 8, 10, 12 ஆண்டுகள் என்ற அடிப்படையில் செலுத்தலாம். பிரீமியம் முடிவில் உத்தரவாதமான கூடுதல் தொகையாக 8.50 முதல் 9.50 சதவீதம் வரை அளிக்கப்படும்.
நவ் ஜீவன் ஸ்ரீ ஒற்றை பிரீமியம் திட்டம், ஆயுள் காப்பீட்டை வழங்குவதோடு, சிறந்த முதலீடாகவும் உள்ளது. துவக்கத்தில் இருந்து பாலிசி காலம் முடியும்வரை, ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவிலும், உத்தரவாதமான கூடுதல் தொகைகள், 1,000 ரூபாய் அடிப்படை காப்பீட்டுத் தொகைக்கு, 85 ரூபாய் என்ற விகிதத்தில் சேர்க்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.