ADDED : செப் 30, 2011 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்: தஞ்சையில், நேற்று முன்தினம் பெய்த கன மழையின் போது இடி தாக்கியதில், பெரிய கோவில் நந்தி மண்டபம் மற்றும் கருவறை விமானத்துக்கும் நடுவில் உள்ள, மணிமண்டப சுவரின் காரைகள் பெயர்ந்து விழுந்தன. சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டது. தகவலறிந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன், கனமழை பெய்த போது, பெரிய கோவிலை இடி தாக்கியது. அப்போது இடிதாங்கிகள் சரி செய்யப்பட்டன.
தற்போதும் இடி தாக்கியுள்ளதால், இடி தாங்கிகளின் செயல்பாடுகளை சரி செய்து அனைத்து கோபுரங்கள், மணிமண்டபங்களிலும் இடிதாங்கிக் கருவிகளை பொருத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.