தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ எல்லோரையும் ஏமாற்றிய எக்சிட் போல்'':மக்கள் மனதில் உள்ளதை சொல்லாது!!

எல்லோரையும் ஏமாற்றிய எக்சிட் போல்'':மக்கள் மனதில் உள்ளதை சொல்லாது!!

எல்லோரையும் ஏமாற்றிய எக்சிட் போல்'':மக்கள் மனதில் உள்ளதை சொல்லாது!!


ADDED : மே 05, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2026 04:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ‛‛எக்சிட் போல்'' என்ற பெயரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எனக் கூறி பெரும்பாலான நிறுவனங்கள் வெளியிட்ட முடிவுகள் கேலிக்கூத்து ஆகி உள்ளன.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஜெயித்ததா, பொய்த்ததா என பார்க்கையில் தவிடுப்பொடியானது என்றே சொல்ல வேண்டும். பீப்பில்ஸ் பல்ஸ், மேட்ரைஸ், பி-மார்க், சாணக்யா என பல நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் சராசரியாக திமுக கூட்டணி 125 முதல் 135 என பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் சராசரியாக அதிமுக கூட்டணி 75 முதல் 85 இடங்கள் பெற்று எதிர்க்கட்சியாகவும், சராசரியாக தவெக 11 முதல் 21 இடங்கள் வரை வெல்லும் எனவும் ஆரூடம் சொன்னார்கள்.

ஓட் வைப் என்ற நிறுவனம் மட்டும் திமுக கூட்டணி 103-113 இடங்களும், அதிமுக கூட்டணி 114-124 இடங்களும், தவெக 4-10 இடங்களும் வெல்லும் என்றது. இவற்றிற்கு அப்படியே தலைகீழாக ஆக்ஸிஸ் மை இந்தியா என்ற நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்களும், அதிமுக 22-32 இடங்களும், தவெக 98-120 இடங்களும் கைப்பற்றும் என்றது.

நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி 73 இடங்கள், அதிமுக கூட்டணி 53 இடங்கள், தவெக 108 இடங்கள் வென்றுள்ளன. அதன்படி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஆக்ஸிஸ் மை இந்தியா கணித்ததுபடி தவெக குறிப்பிட்ட இடங்களில் வென்றுள்ளது. மற்ற கட்சிகளுக்கு அந்நிறுவனம் கணித்தது பொய்த்தது. அதே நேரம், மற்ற நிறுவனங்களின் அனைத்து கருத்து கணிப்புகளும் முற்றிலும் தவறாகி தவிடு பொடியாயின.

எனவே, கருத்துக் கணிப்புகளை வைத்து மக்களின் உண்மையான முடிவுகளை அறிய முடியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us